Amala Paul; வீட்டில் பார்ட்டி கொண்டாடிய அமலா பால்! நடிகை அமலா பால் வீட்டில் இருந்தபடியே சகோதரரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
வீட்டில் இருந்தபடியே நடிகை அமலா பால் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலா பால். ஆடை படத்தின் வெற்றிக்குப் பிறகு கேடவர் மற்றும் அதோ அந்த பறவை போல படத்திலும், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் அமலா பால் வீட்டில் இருந்தபடி பார்ட்டி கொண்டாடியுள்ளார்.
ஆம், அமலா பாலின் சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாள் என்பதால், அதைக் கொண்டாட வீட்டிலேயே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட அமலா பால் மாஸ்க் அணிந்தவாறு டான்ஸும் ஆடியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.