Amala Paul Emotional Feeling; ஊரடங்கு உத்தரவு மூலம் அனைவருமே பெற்றோருடன் இருக்கும் நிலையில், அமலா பால் தனது தந்தை இறந்த சோகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அமலா பால் தனது பெற்றோருடன் நேரத்தை செலவிட முடியாமல் இருக்கும் வருத்தத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவரது இழப்பு அமலா பாலை மிகவும் பாதித்தது. அதையும் கடந்து பல மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கொரோனா காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருமே அவர்களது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அப்படியிருக்கும் போது அமலா பால் மட்டும் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில் அவர கூறியிருப்பதாவது: இந்த உலகத்தை யாரும் நம்மை நேசிப்பதற்கு கற்றுத்தரவில்லை.
மற்றவர்களை நேசிப்பதற்கு கற்றுக்கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகத்தில் நல்லது, கெட்டது இரண்டும் சம விகிதத்தில்தான் இருக்கிறது.
அதில், கெட்டவைகள் நடக்கும் போது இதற்கு முன்னதாக நமக்கு நடந்த நல்லவற்றை நாம் மறந்துவிடக் கூடாது. அதனை இந்த தனிமைப்படுத்துதல் நமக்கு உணர்த்துகின்றது என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில், அமலா பால் இரண்டாவது முறையாக பிரபல பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் வெளியானது.
ஆனால், அதற்கு அமலா பாலின் மேனேஜர், அப்படி ஒன்று இல்லை. ஒரு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. அமலா பாலுக்கு திருமணம் ஆகவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.