Home சினிமா கோலிவுட் பிரபு தேவா படத்தில் இத்தனை ஹீரோயின்களா?

பிரபு தேவா படத்தில் இத்தனை ஹீரோயின்களா?

360
0
Prabhu Deva Bagheera Movie

Prabhu Deva Bagheera Movie; பிரபு தேவா படத்தில் இத்தனை ஹீரோயின்களா? பிரபு தேவா நடிக்கும் பஹிரா என்ற படத்தில் 5 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹிரா படத்தில் 5 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் நடிகர் பிரபு தேவாவும் ஒருவர். நடிகர் மட்டுமல்லாமல், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என்று திகழ்கிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல், யங் மங் சங் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இப்படங்களைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார்.

சைக்கோ த்ரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது.

மீதமுள்ள 30 சதவிகித படப்பிடிப்புக்கு படக்குழுவினர் கோவா, இலங்கை என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள்ளாக கொரோனா உலகம் முழுவதும் பரவ, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் கதைக்கு ஏற்பட பஹிராவில் 5 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி, அனேகன் படத்தில் நடித்த அமைரா ஆகியோர் ஏற்கனவே படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற 3 ஹீரோயினகள் புதுமுக நடிகைகள் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். அதில், ஹீரோயின்களின் போஷன் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇராம நாமத்தின் சிறப்புகள்; இன்று ஸ்ரீ இராம நவமி
Next articleஅப்பா இல்லாத வருத்தத்தை பகிர்ந்து கொண்ட அமலா பால்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here