Amala Paul; வேஷ்டி சட்டையில் கலக்கும் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்! நடிகை அமலா பால் வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேஷ்டி சட்டையில் மாஸ்க் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழிழ் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில், தற்போது அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் அமலா பால் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கிறார்.
தொடர்ந்து, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தான் வேஷ்டி சட்டை அணிந்து, முகத்தில் மாஸ்க் அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.