Andrea Lockdown Shorfilm; கொரோனா லாக்டவுன் குறும்படத்தில் ஆண்ட்ரியா: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! கொரோனா லாக்டவுன் என்ற குறும்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அதற்கான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுனில் ஆண்ட்ரியா ஒரு குறுப்படத்தில் நடித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் பிரபலங்கள் பலரும் எப்போதும் பிஸியான முறையில் தங்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
ஆம், வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது, ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடுவது, ஓவியம் வரைவது, உடற்பயிற்சி என்று எப்போதும் பிஸியாகவே இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டிலேயே ஐபோனில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதற்கு லாக்டவுன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் குறும்படத்தை ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ளார். இந்த நிலையில், அந்த லாக்டவுன் குறும்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த லாக்டவுன் காலத்தில் நாட்டி என்னவெல்லாம் நடந்தது, பிரபலங்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக இந்த குறும்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
லாக்டவுன் குறும்பட போஸ்டரை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த லாக்டவுன் காரணமாக தான் சமைக்க கற்றுக்கொண்டதாகவும், நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், மேடை ஏறி பாடுவதற்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.