Home சினிமா கோலிவுட் காட்டுக்குள்ள கண்ணா பின்னா என்று சுட்டுத்தள்ளும் ஆண்ட்ரியாவின் கா டீசர் வெளியீடு!

காட்டுக்குள்ள கண்ணா பின்னா என்று சுட்டுத்தள்ளும் ஆண்ட்ரியாவின் கா டீசர் வெளியீடு!

268
0
Kaa Teaser Released

Andrea Jeremiah Kaa Teaser; ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த ஆண்ட்ரியாவின் கா டீசர் வெளியீடு! ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் கா படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பின்னணி பாடகியாக இருந்து கொண்டு கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அந்த வகையில், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், இது நம்ம ஆளு, அவள், விஸ்வரூபம் 2, வட சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மாளிகை, வட்டம், அரண்மனை 3, கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கா படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா, கமலேஷ், சலீம் கோஸ், மாரிமுத்து ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கா.

காட்டுக்குள்ள காட்டைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கா படத்தில் ஆண்ட்ரியா, வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். அண்மையில், கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், ஆண்ட்ரியா தனது கையில் கத்தியுடன் ரத்தக் கறையுடன் நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது கா டீசர் வெளியாகியுள்ளது. இதில், காட்டுக்குள்ள நடக்கும் கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அடுத்தடுத்து காட்டுக்குள்ள பல கொலைகள் நடக்கிறது. ஆண்ட்ரியா கையில் துப்பாக்கி வைத்து சுட்டுத் தள்ளுகிறார்.

கிட்டத்தட்ட 1.25 நிமிடம் இருக்கும் வீடியோவில் இறுதியில் ஆண்ட்ரியாவுக்கு என்ன நடக்கிறது என்பது மறைக்கப்பட்டுள்ளது. அதோடு கா டீசர் முடிகிறது.

இந்தப் படம் லாக்டவுன் முடிந்த பிறகு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleநடந்தது நிச்சயமில்லை: அது வெறும் பூ முடித்தல் விழா: ராணாவின் தந்தை விளக்கம்!
Next articleடாப்ஸி அதிரடி அறிவிப்பு: தயாரிப்பாளர்களுக்காக டாப்ஸி எடுத்த முடிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here