அனிருத் அடுத்த ஏ.ஆர் ரகுமானா?
ஏ.ஆர்.ரஹ்மான்
1992 ஆம் ஆண்டு வெளியான படம் ரோஜா,
அதில் இருந்து கிடைத்தவர் தான் நம் இசையின் ராஜா ஏ ஆர் ரகுமான்.
25வது வயதில் அறிமுகமான ஏ ஆர் ரகுமான் முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார்.
அன்றிலிருந்து இன்றுவரை இசையின் சாம்ராஜ்யமாக தமிழில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஓ காதல் கண்மணி,மெர்சல், அச்சம் என்பது மடமையடா, பிகில் போன்ற படங்களால் இன்றும் இளைஞர்கள் மத்தியில் சிங்க நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஐம்பது வயது இளைஞன்
வயதும் ஐம்பதைக் கடந்து விட்டது ஆனால் இன்றும் இளைஞர்கள் மத்தியில் அவர் இளைஞனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மக்களின் நன்மதிப்பையும், இசையில் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடமும் பதித்து கொண்டவர்தான் ஏ ஆர் ரகுமான்.
படம் நல்லா இருக்குமோ? இல்லையோ?, படம் ஓடுமா? ஓடாதா? என்று தெரியாது ஆனால் படத்தின் பாடல்கள் 100% வெற்றி பெறும் நம் ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார் என்றால்.
அனிருத் வருகை
ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் சொந்தக்காரர் என்று மிகப்பெரிய பின்புலத்தில் 2011 ஆம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் அனிருத்.
தனது பின்புலத்தை பயன்படுத்தாமல் தன் உழைப்பாலும், தன் இசையாலும் இன்று இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய இசைக் கலைஞனாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
ஒய் திஸ் கொலவெறி
தனது 21ஆவது வயதில் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடித்து ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான படம்தான் 3.
3 படம் வெளியாகும் முன்பே முதல் பாடல் வெளியானது. அந்த பாடல் தான் “ஒய் திஸ் கொலவெறி” பாட்டு, வெளியான உடனேயே உலகம் முழுவதும் இந்த பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கடந்து இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனுசை விருந்து சாப்பிட அழைத்தது இந்த பாடல் தான்.
3 படம் சரியாக ஓட வில்லை ஆனால் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.
எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், மான் கராத்தே போன்ற படங்களின் பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அனிருத் தனக்கென இசையமைப்பாளர்களில் ஒரு இடத்தைப் பிடித்தார்.
அம்மா அம்மா பாடல்
அடுத்து வெளியான வேலையில்லா பட்டதாரி, அந்த படத்தில் அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக அமைந்தது.
குறிப்பாக ‘அம்மா அம்மா’ பாடல் இன்றும் அம்மாவை போற்றும் பட்டியலில் முன்னிலையில் வரும்.
அடுத்ததாக அனிருத்துக்கு அடித்தது ஜாக்பாட்.
கத்தியில் விஜய்யுடன்
முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் முதல் திரைப்படம் துப்பாக்கி, மிகப்பெரிய வசூல் சாதனை அடைந்தது மீண்டும் இதே கூட்டணி கத்தி எனும் படத்தில் இணைந்தது.
இதில் இசை அமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டார். பாடல்கள் அனைத்தும் தரமாகவும் விஜய்க்கு ஏற்றதாகவும் வெளுத்து உள்ளே புகுந்து விளையாடிருப்பார் அனிருத்.
ஹிப்ஹாப் தமிழா விற்கு தமிழில் முதலில் வாய்ப்பு தந்ததும் நம் அணிருத் அவரை கத்தி படத்தில் விஜய்க்கு முதல் பாடலை பாட வைத்து பாடலை ஹிட் ஆக்கினார்.
‘செல்ஃபி புள்ள’, ‘ஆத்தி என நீ’ போன்ற பாடல்கள் படத்தில் மிகவும் அருமையாக அமைந்தது பிறகு அனிருத்தின் இசை வாழ்க்கை வெற்றியின் திருப்புமுனையே.
அடுத்தடுத்து காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான், மாரி போன்ற படங்களுக்கு இசையமைத்து அஜித்தின் வேதாளம் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆலுமா டோலுமா
படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாட்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வெற்றி பெற்று இளைஞர்கள் மத்தியில் பாடலைக் கேட்டாலே நடனம் ஆடும் அளவிற்கு வரவேற்பைப் பெற்றது.
ரெமோ, விவேகம், தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா போன்ற படங்களுக்கு இசை அமைத்து தன் வளர்ச்சியை மேலும் மேலும் மெருகேற்றினார்.
சிம்புவுடன் ஒரு பாடலில் சர்ச்சை, வீடியோக்கள் மூலம் பல சர்ச்சை, முத்தங்கள் சர்ச்சை என பல சர்ச்சைகளில் சிக்கினார்.
பேட்ட, தர்பார்
நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைத்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் தாறுமாறாக ஹிட்டடித்து ரஜினியை இளமையாக்கியது.
மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைத்து தர்பார் படத்தில் விளையாட்டை காட்டினார் அனிருத். பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றது படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விஜய்யுடன் மீண்டும் இணைவாரா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் மாஸ்டர் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக உறுதியானது.
அதில் இசையமைப்பாளராக அனிருத்தும் இணைந்து கொண்டார்.
‘3’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொந்தக்காரராக அறிமுகமான அனிருத், உலக அளவிற்கு வளர்ந்து ரஜினியின் பெயரை காப்பாற்றி தனக்கென ஒரு இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
பல இசையமைப்பாளரின் படங்களின் பாடல்களைப் பாடி, தான் ஒரு பின்னணி பாடகர் என்றும் ரசிகர்கள் மத்தியில் தன்னை நிரூபித்துக் கொண்டார்.
அனிருத், ஏ ஆர் ரகுமான் அளவிற்கு வர முடியுமா என்று கேட்டால்? அன்றைய காலகட்டத்தில் இது போன்ற சமூக வலைதளங்கள் கிடையாது. அந்த காலக்கட்டத்தில் ஒரு சிலர் வீட்டில் மட்டுமே டிவி இருந்தது.
அப்போதே ஆர் ரகுமான் வெற்றி பெற்று உலக அளவில் பிரபலம் ஆனார்.
இன்று அணிருத் போடும் இசையை நாம் அதிநவீன புது தொழில்நுட்பத்துடன் கேட்கும் கருவி வந்துவிட்டது.
ஆனால் ஏ ஆர் ரகுமான் காலத்தில் அப்படி கிடையாது ரேடியோ, இல்லையென்றால் என்றாவது ஒளியும் ஒலியும் போன்று நிகழ்ச்சிகள்தான் ஏ ஆர் ரகுமான் பாடலை கேட்கவே முடியும்.
ஏ ஆர் ரகுமான், ஏ ஆர் ரகுமான் தான். அனிருத் இன்னும் வளர வேண்டிய தூரம் நீண்டதூரம் உள்ளது. ஆனால் அனிருத்துக்கு என்று தமிழ் மக்கள் மனதில் ஒரு இடம் உண்டு