Anjali Instagram Video; இதை மட்டும் செய்தாலே நல்ல உடற்பயிற்சி தான்: வைரலாகும் அஞ்சலி வீடியோ! நடிகை அஞ்சலி தனது வீட்டை சுத்தம் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை அஞ்சலி தான் வீட்டை சுத்தம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒருநாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வரும் 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடரும் என்று கூறப்படுகிறது.
லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட வேலைகளை வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, யோகா, உடற்பயிற்சி, விவசாயம், தோட்ட வேலை பார்ப்பது என்று எப்போதும் பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ஜிம்முக்கு போகமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டில் இருக்கும் சமையலறையை சுத்தம் செய்தாலே அது பெரிய உடற்பயிற்சி போன்றது என்று குறிப்பிட்டு வீட்டின் சமையலறையை சுத்தம் செய்யும் வீடியோவை பதிவிடுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.