Home சினிமா கோலிவுட் குடும்பம் தான் அழகான பரிசு: குடும்பத்தோடு காட்சியளிக்கும் அருண் விஜய்!

குடும்பம் தான் அழகான பரிசு: குடும்பத்தோடு காட்சியளிக்கும் அருண் விஜய்!

624
0
Arun Vijay Family Album

குடும்பம் தான் அழகான பரிசு: குடும்பத்தோடு காட்சியளிக்கும் அருண் விஜய்! நடிகர் அருண் விஜய் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய் தனது குடும்ப புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் அருண் விஜய். யாருக்கும் போட்டியில்லாமல், அவரது ஸ்டைலில் அவர் நடித்துக் கொண்டிருந்தார்.

முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 3 வருட இடைவெளி. அப்போதுதான் தல அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். மேலும், பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது.

குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், சாஹோ ஆகிய மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

அண்மையில், மாஃபியா படம் வெளியானது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மாஃபியா 2 படம் வெளியாக இருக்கிறது.

மேலும், அக்னி சிறகுகள், வா டீல், பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதோடு, குடும்பம் என்றென்றும் நீடிக்கும் ஒரு பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில், அருண் விஜய் தனது அப்பா விஜயகுமார், அம்மா முத்துக்கண்ணு, மனைவி ஆர்த்தி மோகன், ஆர்ணவ் என்ற மகன் மற்றும் பூர்வி என்ற மகள் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைத் தான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவு என்பதால், வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்யும், வீடியோவையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

SOURCER SIVAKUMAR
Previous article1983 ஆண்டிற்கு சென்று இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை காண ரெடியா?
Next articleசார்ஸ் வைரஸ் எப்படி முடிவுக்கு வந்ததென்று தெரியுமா? – அதிர்ச்சியளிக்கும் இயற்கையின் சக்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here