Home சினிமா கோலிவுட் ஆர்யா – சாயிஷாவின் டெடி ஓடிடி தளத்தில் வெளியீடு?

ஆர்யா – சாயிஷாவின் டெடி ஓடிடி தளத்தில் வெளியீடு?

313
0
Teddy OTT Release

Teddy OTT Release; ஆர்யா – சாயிஷாவின் டெடி ஓடிடி தளத்தில் வெளியீடு? ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் மற்றும் பென்குயின் ஆகிய படங்களைப் போன்று டெடி படமும் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இளம் காதல் ஜோடிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தின் மூலம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர். ஆனால், ஜோடியாக நடிக்கவில்லை. இந்த நிலையில், டெடி படத்தின் மூலம் ஆர்யா – சாயிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் டெடி (Teddy). இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

மேலும், பிக் பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால், நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் கருணாகரன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

டெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Teddy First Look) வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்யா சாயிஷாவின் திருமண நாளை முன்னிட்டு டெடி டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படம் குறித்து சக்தி சௌந்தர்ராஜன் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் டெடி (Teddy) பியர் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாகவே டெடி பியர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

டெடி பியர் சண்டையிடும் ஒரு கதாபாத்திரமாக நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆதால், இந்தப் படத்தின் மூலம் டெடி பியர் அதிகளவில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், அண்மையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் வெளியாகியது. இந்தப் படங்களைத் தொடர்ந்து ஆர்கே நகர், லாக்கப், காக்டெய்ல், டேனி ஆகிய படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது ஆர்யா – சாயிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் டெடி படமும் ஓடிடி தளத்திலேயே வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓடிடி தளத்திலேயே படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleதளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் கோலிவுட்!
Next articleசூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here