Home சினிமா கோலிவுட் தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் கோலிவுட்!

தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் கோலிவுட்!

261
0
Bomb Threat To Vijay House

Vijay Bomb Threat; தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் கோலிவுட்! தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.

இதுவரை 64 படங்களில் நடித்துள்ளார். இவரது 64ஆவது படமாக மாஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது பேசிய அந்த மர்ம நபர் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் முடிவில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும், இது வெறும் மிரட்டல் தான் என்றும் தெரியவந்தது.

இதன் காரணமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டனர். உடனடியாக அந்த மர்ம நபர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், இது தொடர்பாக விழுப்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இது போன்று வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் சம்பவம் கோலிவுட்டில் முன்னணி மாஸ் நடிகர்களை அதிர்ச்சியடைச் செய்து வருகிறது.

Previous articleகோலிவுட்டின் கிங் தளபதி விஜய்: #VijayTheMasterOfKw!
Next articleஆர்யா – சாயிஷாவின் டெடி ஓடிடி தளத்தில் வெளியீடு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here