Home சினிமா கோலிவுட் சமையல் முதல் கிளீனிங் வரை: வைரலாகும் அசின் மகள் அரின் வீடியோ!

சமையல் முதல் கிளீனிங் வரை: வைரலாகும் அசின் மகள் அரின் வீடியோ!

212
0
Arin Viral Video

Asin Daughter Arin Viral Video; சமையல் முதல் கிளீனிங் வரை: வைரலாகும் அசின் மகள் அரின் வீடியோ! நடிகை அசின் மகள் அரின் வீட்டில் சமையல் செய்வது, சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசின் மகள் அரின் மினி கிச்சன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, கமல் ஹாசன், விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அசின் – ராகுல் ஷர்மா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரின் என்று பெயர் வைத்தனர்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை அசின், தனது மகள் அரின் வீட்டில் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், வீட்டில் மினி கிச்சன் உருவாக்கி அதில், டம்மியான பாத்திரங்களை வைத்து சமையல் செய்வது விளையாடி வரும் போட்டோ மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தரையை துடைப்பது போன்று இருக்கும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அசின் கூறுகையில், “சீரியசான குவாரண்டைன் குக்கிங் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்: தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம்!
Next articleநீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான ₹.1,350 கோடி வைரங்கள், முத்துக்களை அமலாக்கத்துறை மீட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here