Atharvaa; அடிமையா நடித்த அதர்வா பர்த்டே டுடே! அதர்வா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதர்வாவின் பிறந்தநாள் இன்று HBD Atharvaa.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் முரளி. கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவரது மகன் அதர்வாவும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அதர்வாவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வழங்கப்பட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து வந்த, பரதேசி படம் அதர்வாவுக்கு ஹிட் கொடுத்தது.
பிலிம்பேர் விருது, 11ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விருது, தீவிர செயல்திறனுக்கான எடிசன் விருது, சிறந்த நடிகருக்கான நார்வே தமிழ் திரைப்பட விருது ஆகிய விருதுகள் அதர்வாவுக்கு வழங்கப்பட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், செம்ம போத ஆகாத, இமைக்கா நொடிகள், பூமராங், 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில், இமைக்கா நொடிகள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது.
தற்போது, குருதி ஆட்டம், தள்ளி போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
முதல் படத்தின் வாய்ப்பு வரும் போது அதர்வாவின் தந்தை முரளி மிகவும் பெருமைப்பட்டுள்ளார்.
ஸ்டண்ட் இயக்குநர் பயிற்சிக்கு சென்ற அதர்வா படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். அப்போது தான் பானா காத்தாடி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
அதர்வாவிற்கு காவ்யா என்ற மூத்த சகோதரியும், ஆகாஷ் என்ற இளைய சகோதரனும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், அதர்வா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.