Home சினிமா கோலிவுட் சூப்பரான கிளைமேட்டில் அழகான தேவை: வீடியோ வெளியிட்ட அதுல்யா ரவி!

சூப்பரான கிளைமேட்டில் அழகான தேவை: வீடியோ வெளியிட்ட அதுல்யா ரவி!

540
0
Athulya Ravi

Athulya Ravi; கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருக்கும் அதுல்யா ரவி படப்பிடிப்பு வீடியோ வெளியிட்டு அந்த படப்பிடிப்பு நாட்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுல்யா ரவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு, ஏமாளி, சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் விளைவாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் ஜாலியாக புகைப்படங்கள், வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை அதுல்யா ரவி, படப்பிடிப்பின் போது சாலையில் நடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், படப்பிடிப்பு நாட்களை மிஸ் செய்வதாகவும், 2020ன் எதிர்மறையான சொல் நேர்மறையானது, அது கோவிட் 19ஆகும் என்றும், ஆனால் ஒவ்வோரு பிரச்சினைக்கும் ஒரு முடிவு உள்ளது என்பது நம்பிக்கை என்றும், ஒன்றாக வலுவாக இருப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஊரடங்கு முடியும் வரை டுவிட்டருக்கு டாட்டா காட்டிய விவேக்!
Next articleஇலவச அரிசியை இருமடங்காக வாங்கிக்கொள்ளலாம், தமிழக அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here