Home சினிமா கோலிவுட் அட்லீயின் ‘அந்தகாரம்’ OTT தளத்தில் வெளியாகும்

அட்லீயின் ‘அந்தகாரம்’ OTT தளத்தில் வெளியாகும்

297
0
அட்லீயின் 'அந்தகாரம்' OTT தளத்தில் வெளியாகும்

அட்லீயின் ‘அந்தகாரம்’ OTT தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 29-ம் தேதி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப்படம் அமேசானில் நேரடியாக வெளியானது.

அட்லீ,  இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் தமிழில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா நடிப்பில் ராஜா ராணி என்ற வெற்றி படத்தை இயக்கினார்.

இதன் பின்னர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கினார். மேலும் அட்லீ சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தை தயாரித்தார்.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில்  நடித்து இருந்தனர். அதன் பிறகு அட்லீ சில வருடங்கள் படம் தயாரிக்காமல் இருந்தார்.

சமீபத்தில் அட்லீ, அர்ஜுன் தாஸ் நடிப்பில் அந்தகாரம் என்ற படத்தினி தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

ட்ரைலரை பார்த்துவிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் இவரை பாராட்டினார். பாலிவுட் நடிகர் வருண் தவானும் ட்ரைலர் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறியுள்ளார்.

இதேபோல் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் அந்தக்காரம் ட்ரைலர் பார்த்துவிட்டு, “Can’t wait to see it!!” என ட்வீட் செய்து இருந்தார்.

விக்னராஜன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தற்போது நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நெட்பிலிக்ஸ் நிறுவனம் தான் அந்தகாரம் திரைப்படத்தை வாங்கி உள்ளது. இந்த மாதம் நேரடியாக OTT தளத்தில் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது படம்.

சமீபத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது அட்லீயும் தனது படத்தை நேரடி OTT ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் HD தரத்தில் லீக் ஆகியது.

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பென்குயின் திரைப்படமும் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

அந்தகாரம் படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகிவுள்ளது. மூன்று தனித்தனி கதைகள் சேர்ந்து ஒரு புள்ளியில் இணையும் ஒரு படமாக இது இருக்கும் என அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா, குமார் நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

Previous articleஜெசிக்கா லால் கொலை வழக்கு குற்றவாளி விடுதலை
Next articleதிருப்பூர் காவல்துறை கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேரை கைது செய்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here