Raiza Wilson; பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா வில்சன் இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரைசா வில்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தவர் நடிகை ரைசா வில்சன். இவர் ஒரு மாடல்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டிருந்த போது தனுஷ், அமலா பால், கஜோல் நடிப்பில் வந்த வேலையிலலா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வந்தது.
இந்தப் படத்தில் கஜோலுக்கு அதுவும் பெர்சனல் பிஏவாக நடித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரைசா வில்சனுக்கு பியார் பிரேமா காதல் படம் நல்ல வரவேர்பு கிடைத்தது.
காதல், ரொமாண்டிக் கலந்த இந்தப் படம் காதலர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே படத்தில் நடித்தார்.
தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர்., ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், நண்பர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் சார்பாக நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரைசா வில்சன்…