Tamannaah Challenge; தமன்னாவின் டிஜிட்டல் ஒர்க் அவுட் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ! வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஒர்க் அவுட் செய்யும் தமன்னாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமன்னா டிஜிட்டல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக அப்பாவி ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கிறார்கள்.
ஆனால், சினிமா பிரபலங்கள் பலரும் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலகள் செய்வது, சமையல் கற்றுக் கொள்வது, துணி துவைப்பது, யோகா, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.
அதோடு, தங்களது அன்றாட வேலைகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகை தமன்னா தான் ஜிம்மிற்கு செல்ல முடியாது என்பதால், உடற்பயிற்சியாளர் கற்றுக்கொடுப்பதை வீட்டில் இருந்தபடியே தமன்னா செய்து வருகிறார்.
ஜிம் டிரெயினர் உதவியோடு வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், எனது பயிற்சியாளருடன் டிஜிட்டல் ஒர்க் செய்யும் போது எனக்கு பெரிய சவாலாக இருந்தது எனது செல்போனை எப்படி சரியான நிலையில் வைப்பதுதான். உடற்பயிற்சி கூட எனக்கு சவாலாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.