அம்மாவான பிக் பாஸ் பிரபலம்: வைரலாகும் புகைப்படம்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரம்யா என்.எஸ்.கே தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பிக் பாஸ் பிரபலம் ரம்யா என் எஸ் கே தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் பேத்தி ரம்யா என்.எஸ்.கே. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
அதோடு, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனம் ஈர்த்தார்.
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர், மன்னர் வகையறா படத்திலும், நீலக்குயில் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரம்யா என் எஸ் கேவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்.
ஏன் மீண்டும் மீண்டும் உடல் எடையை அதிகரித்திருக்கிறேன் என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்கு விரைவில் பதிலளிப்பதாக கூறியிருந்தேன்.
தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. அதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வதில், மகிழ்ச்சியடைகிறேன். நான் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்தேன்.
அதனால், தான் எனது உடல் எடை கூடியது. இனி மீண்டும் எனது உடல் எடையில் கவனம் செலுத்த இருக்கிறேன்.
உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல் எடையில் கவனம் செலுத்தப்போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்யா என் எஸ் கே – சத்யா தம்பதியினருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.