Kavin Birthday; பிக் பாஸ் கவின் பர்த்டே டுடே! சரவணன் மீனாட்சி வேட்டையனாக வலம் வந்த நடிகர் கவின் இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகர் கவின் பிறந்தநாள் இன்று.
கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின்.
இந்த தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமான பீட்சா என்ற படத்தில் நடித்தார். ஆனால், இந்தப் படத்தில் கவினின் கதாபாத்திரம் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை.
இதையடுத்து, தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையனாக வலம் வந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தில் நடித்தார். அதன் பிறகு சத்ரியன், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், 94 ஆவது நாளில் குடும்பத்தில் நிலவிய பிரச்சனை காரணமாக போட்டியிலிருந்து ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் வெளியேறினார்.
இந்நிகழ்ச்சியில் லோஸ்லியாவை காதலித்தார். ஆரம்பம் முதலில் நடிகை அபிராமி, சாக்ஷி அகர்வால் ஆகியோரை காதலித்து வந்த கவின், இறுதியில், ஒரே ஒருவரான லோஸ்லியாவை காதலித்தார். அவருக்கு என்று தனியாக பாடல்களையும் பாடி அசத்தினார்.
லோஸ்லியா – கவின் காதலுக்கு லோஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் பிரிந்து விடலாம் என்று எண்ணினர். ஆனாலும், அப்படி எதுவும் இல்லாமல், இருவரும் ஒருவரையொருர் புரிந்து கொண்டு காதலித்து வந்தனர்.
இறுதியில், கவின் போட்டியிலிருந்து வெளியேறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் லோஸ்லியா கதறி அழுதார்.
தற்போது அவர்களுக்கு இடையில் காதல் இருக்கிறதா? இல்லையா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்கின்றனர்.
லோஸ்லியா, ஹர்பஜன் சிங், ஆக்ஷன் கிங் ஆர்ஜூன் ஆகியோருடன் இணைந்து ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார்.
கவின், பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி ஐயர் உடன் இணைந்து லிப்ட் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் வீட்டில் இருந்த கவின், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அதிகளவில் முடியுடனும், தாடியுடனும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில், இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கவின் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் கவினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கவின் டாக்டர் படத்தில் துணை இயக்குநராக நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.