Home சினிமா கோலிவுட் சந்திரமுகியாக நடிக்கப் போவது இவரா? ஜோதிகா இல்லையா? வைரலாகும் வீடியோ!

சந்திரமுகியாக நடிக்கப் போவது இவரா? ஜோதிகா இல்லையா? வைரலாகும் வீடியோ!

804
0
Chandramukhi 2

Chandramukhi 2; சந்திரமுகியாக நடிக்கப் போவது இவரா? ஜோதிகா இல்லையா? வைரலாகும் வீடியோ! சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாகவும், ஜோதிகா நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் பிரபல் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளதாக ராகவா லாரனஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு ஆகியோர் பலர் நடித்த படம் சந்திரமுகி. இந்தப் படத்தை சிவாஜி புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் ராம்குமார் கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை அனைவருமே கொண்டாடினர். சந்திரமுகி 800 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, சந்திரமுகி 2 படத்தை இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

ரஜினிகாந்தின் ஆசியுடனும், அனுமதியுடனும் பேய் படங்களை கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சந்திரமுகி படத்தில் ஜோதிகா பேய் கதாபாத்திரத்தில் நடித்த தோரணையில், ஒரு நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்திரமுகியாக நடித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Urvashi Rautela

இதனைப் பார்த்த பலரும் இவர் தான் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார் என்று யூகிக்கத் தொடங்கினர். இவர் வேறு யாருமில்லை. பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டலா.

இவர் ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். ஊர்வசி ரௌட்டலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் வந்ததை கொண்டாடும் வகையில், சந்திரமுகி போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

உண்மையில், சந்திரமுகி 2 படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும் அதுவரை வெளியாகும் செய்திகள் எல்லாமே தகவலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திலும் ஜோதிகாவே ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படியில்லை என்றால், இதுவரை ராகவா லாரன்ஸ் யாரெல்லாம் பேயாக வந்தார்களோ அவர்களில் யாரேனும் ஒருவருக்கு சந்திரமுகி 2 படத்தில் பேயாக வரும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

Bollywood actress Urvashi Rautela’s Chandramukhi video goes viral in social media

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here