Home சினிமா கோலிவுட் தல அஜித்தின் வலிமை திரையரங்கிலா? ஓடிடி தளத்திலா? போனி கபூர் விளக்கம்!

தல அஜித்தின் வலிமை திரையரங்கிலா? ஓடிடி தளத்திலா? போனி கபூர் விளக்கம்!

297
0
Valimai Theatre Release

Thala Ajith Valimai Movie; தல அஜித்தின் வலிமை திரையரங்கிலா? ஓடிடி தளத்திலா? தயாரிப்பாளார் போனி கபூர் விளக்கம்! தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் திரையரங்கில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அஜித்தின் வலிமை படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார்.

தல அஜித்தின் 60ஆவது படமாக உருவாகி வரும் தல60 படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைத்து படப்பிடிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த நிலையில், தான் உலகத்தை ஆட்டி வைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இதன் விளைவாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக சிறிய பட்ஜெட் படங்கள், முதல் பெரிய பட்ஜெட் படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்று அனைத்து படங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமலும், வேறு வழியில்லாமலும், எடுத்து முடிக்கப்பட்ட படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத போது, இனி வரும் படங்களும் இதே போன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகளவில் ஏற்பட்டது.

அது, தளபதி விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம், தல அஜித்தின் வலிமை ஆகிய படங்களுக்கும் பொருந்தும். இந்த நிலையில், தான் இது குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து கூறுகையில், படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது தான் சிறந்த அனுபவத்தை தரும். எனது படங்களை பெரிய திரைக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வலிமை படத்தை திரையரங்கில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்கும்.

எனது 40 ஆண்டுகால சினிமா பயணத்தில் திரையரங்கில் வெளியாகும் படம் தான் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஈடுபடச் செய்கிறது என்று பெருமையோடு கூறியுள்ளார்.

இதன் மூலம் தல அஜித்தின் வலிமை எப்போது வந்தாலும் அது திரையில் தான் வெளியிடப்படும் என்று தெளிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிஜய்யை பளார் என்று அடித்தேன்: நடிகை அனுயா!
Next articleலோஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு: 1yearoflosliyaism டிரெண்டிங்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here