Thala Ajith; ஏன் அஜித் வீட்டிலேயே இருக்கிறார் தெரியுமா? காரணத்தை போட்டுடைத்த பைக் ரேசர்! பெரும்பாலும் அஜித் வெளியில் வருவதில்லை. இதற்கான காரணத்தை அவர் கூட கூறியது இல்லை. இது குறித்த முக்கியமான காரணம் ஒன்றை பைக் ரேசர் தெரிவித்துள்ளார்.
ஏன் அஜித் Ajith வெளியில் வருவதில்லை என்பதற்கான காரணத்தை பைக் ரேசர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் தல அஜித் Thala Ajith. தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே வைத்து தனது சொந்த முயற்சியில் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். அஜித்திற்கு மட்டுமலல், அவரது மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா மற்றும் ஷாலினி ஆகியோருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அஜித் அவர் உண்டு, அவரது வேலை உண்டு என்று இருப்பவர். யாருடைய விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிடவும் மாட்டார். படத்தில் நடிப்பதோடு சரி. பட புரோமோஷன் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா என்று எதிலும் கலந்து கொள்ளவும் மாட்டார்.
அவர் வெளியில் வருவதற்கான முக்கியமான சில காரணங்கள்: ஒன்று வாக்களிப்பதற்கு மற்றொன்று குழந்தைகளின் பள்ளிவிழா நிகழ்ச்சி. அவ்வளவு தான் மற்றபடி அஜித்தை வெளியில் எங்கும் காணமுடியாது.
அது ஏன் என்பதற்கான காரணத்தை சென்னை பைக் ரேசரான ஆலிசா அப்துல்லா தெளிவாக கூறியுள்ளார்.
அஜித் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் ஆலிசா அப்துல்லா. பலமுறை அஜித்துடன் உரையாடிக்கிறார். ஆலிசாவின் தந்தை ஆர்.ஏ.அப்துல்லா மற்றும் அஜித் இருவரும் இணைந்து பல பைக் ரேஸ் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆலிசா அப்துல்லா தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அஜித் வெளியில் வராததற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
ரசிகர்கள் அஜித்திற்கு தனி உரிமை கொடுக்கவில்லை. இது ரேஸ் டிராக்கில் நடந்த நிகழ்வுகளில் ஒன்று. அங்கு ரசிகர்கள் அவரை நடக்கக் கூட அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், அஜித் சாரால், ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியவில்லை.
இதுதான் அவர் கடைசியாக வெளியில் சென்றது. இனிமேல் வெளியில் வரக்கூடாது என்று அவர் அப்போதே முடிவு செய்துவிட்டார் என்று அவரது பதிவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் தன்னை பற்றி மட்டுமல்ல, இந்த சமூகத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர். எங்கு நாம் வெளியில் சென்றால் ரசிகர்கள் வந்து சூழ்ந்து கொள்வார்களோ? அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுமோ? ரசிகர்களு ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ என்று கவலைப்படக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.