Home சினிமா கோலிவுட் முழுசா அந்நியனாக மாறிய தொகுப்பாளினி அர்ச்சனா: கொரோனா செஞ்ச வேலை அப்படி!

முழுசா அந்நியனாக மாறிய தொகுப்பாளினி அர்ச்சனா: கொரோனா செஞ்ச வேலை அப்படி!

0
412
Archana Chandhoke Anniyan

Archana Chandhoke Anniyan; அந்நியனாக மாறிய தொகுப்பாளினி அர்ச்சனா: கொரோனா செஞ்ச வேலை அப்படி! தொகுப்பாளினி அர்ச்சனா நடிகர் சியான் விக்ரம் போன்று அந்நியனாக மாறிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொகுப்பாளினி அர்ச்சனா அந்நியனாக Archana Chandhoke Anniyan மாறிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சித் துறையில் சிறந்த தொகுப்பாளினியாக திகழ்பவர் அர்ச்சனா. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார்.

அதன் பிறகு இளமை புதுமை, கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம், செலிபிரிட்டி கிச்சன், அதிர்ஷ்ட லக்‌ஷ்மி, சரிகமப லில் சாம்ஸ் (சீசன் 1 மற்றும் 2) என்று பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவ்வளவு ஏன், தனது மகள் சாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழில் தொகுத்து வழங்கினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போதிலும் என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், ஏண்டா தலையில எண்ண வெக்கல ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், அர்ச்சனா அந்நியன் விக்ரம் போன்று ஹேர்ஸ்டைலை முன்புறம் தொங்கவிட்டபடி போஸ் கொடுத்துள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், Quarant’anniyan’ed!! #Lockdown என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, பலரும் ஏற்கனவே கொரோனாவால் பயந்து போய்தான் இருக்கிறோம் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

இதன் மூலம் தொகுப்பாளினி அர்ச்சனா என்பதற்குப் பதிலாக அந்நியன் அர்ச்சனா என்று அழைக்கப்படுகிறார் என்று பலரும் கிண்டலடித்துள்ளனர்.

archana Chandhoke who turns like chiyaan vikram anniyan getup during quarantine

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here