Chiranjeevi; ரத்த வங்கியில் ரத்தம் பற்றாக்குறை: ரசிகர்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்! கொரோனா லாக்டவுன் காரணமாக ரத்த வங்கிகளில் ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி ரத்த தானம் செய்துள்ளார். அதோடு, ரசிகர்களையும் ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ரத்த வங்கிகளில் ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி ரத்த தானம் வழங்கியதோடு ரசிகர்களையும் ரத்த தானம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து நடிகர் – நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா பிரபலங்களுக்கு உதவும் வகையில், நிதியுதவியும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக மற்ற நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் ரத்த தானம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உயிர் காக்கும் ரத்தத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்களில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
இதய நோயாளிகள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், விபத்தி சிக்கியவர்கள், புற்று நோயாளிகள் ஆகியோருக்கு ரத்தம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
அவர்களை காப்பாற்றுவதற்காக பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் அருகிலுள்ள ரத்த வங்கிக்கு சென்று ரத்த தானம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தும் ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.