Thumbi Thullal Song Stills; கோப்ரா முதல் சிங்கிள் டிராக்: தும்பி துள்ளல் பாடல் புகைப்படங்கள் வெளியீடு! சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்ரா தும்பி துள்ளல் பாடல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.
வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் வரும் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த அழைப்பிதழில், சியான் விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் மணக்கோளத்தில் இருக்கின்றனர்.
இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆம், மதியழகன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரமும், பாவனா மேனன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி ஷெட்டியும் நடிக்கின்றனர்.
மதியழகன் மற்றும் பாவனா மேனன் திருமண நிச்சயதார்த்தம் என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தும்பி துள்ளல் பாடல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதியழகனாக வரும் விக்ரமுக்கும், பாவனா மேனனாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.
அப்போது வரும் பாடல் தான் தும்பி துள்ளல். இந்தப் பாடலின் புகைப்படங்கள் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக டுவிட்டரில் கோப்ரா ஹேஷ்டேக் டிரெண்டானது.