Home சினிமா கோலிவுட் சியானின் கோப்ரா வெளியீடு எப்போது?

சியானின் கோப்ரா வெளியீடு எப்போது?

250
0
Chiyaan Vikram Cobra Release Date

Cobra Release Date; சியானின் கோப்ரா வெளியீடு எப்போது? சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் வெளியீடு வரும் கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சியான் விக்ரமின் கோப்ரா படத்தை கிறிஸ்துமஸ் 2020 அல்லது பொங்கல் 2021 பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.

வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது.

கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோப்ரா படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஓடிடியில் வெளிவரும் ராகவா லாரன்ஸின் லட்சுமி பாம்!
Next articleநில சுரங்கத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் புதன் கிழமை வெடிவிபத்து 6 பேர் பலி: நெய்வேலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here