பிரபலங்களின் மனதில் இடம் பிடித்த தல அஜித்துக்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்! தல அஜித் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நிலையில், திரையுலக பிரபலங்கள் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தல அஜித்துக்கு ஒட்டு மொத்த சினிமா உலகினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, தைரியம், தன்னடக்கம், விடா முயற்சி ஆகியவற்றின் மூலம் உச்சம் தொட்டவர் தல அஜித். அதற்காக இவர் வாங்கிய வலிகளோ இவரது வரலாறு பேசும்.
பாசத்தில் விஸ்வாசம், தைரியத்தில் வீரம், செயல்படுவதில் விவேகம், பார்க்கும் குணத்தில் நேர்கொண்ட பார்வை, எதையும் செயலாற்றுவதில் வலிமை என்று அஜித்தின் படங்களே அவரது முழு உருவத்தையும் சித்தரிக்கும்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் சினிமா பிரபலங்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன்
அஜித்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் காலையிலேயே ஹேப்பி பர்த்டே டியர் தல அஜித் சார் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரத்ன குமார்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். நான் அதிகம் பார்த்த படம் முகவரி என்றும், தனக்கு பிடித்த காட்சி என்று அஜித், ஜோதிகா ஆகியோர் இருக்கும் கிளைமேக்ஸ் காட்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு
தல அஜித்துக்கு மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர், தனது டுவிட்டர் பக்கத்தில், மை டியர் தல.. ஹேப்பி பர்த்டே அண்ணா என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டிபியையும் அஜித் பர்த்டே காமன் டிபியாக மாற்றியுள்ளார்.
யாஷிகா ஆனந்த்
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி வெளியிட்ட பிரபலங்களில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். இவர், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.
அதன்படி, சிறந்த இதயம் கொண்ட சிறந்த நடிகர் நீங்கள், இதேபோல எப்போதுமே ஒளிர்ந்து கொண்டே இருங்கள் என வாழ்த்தியுள்ளார்.
பிரேம் ஜி
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம் ஜி எங்களுக்கு மங்காத்தா 2 வேண்டும் என்று கோரிக்கை வைத்தபடி, தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாந்தனு
தல அஜித்தின் காமன் டிபியை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை நடிகை அபிராமி
நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்தவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர், தனது டுவிட்டர் பக்கத்தில், தனது வாழ்க்கையில் பல மனிதர்கள் கடந்து சென்றிருந்தாலும், தல அஜித் தனது காலடி தடங்களை விட்டுச் சென்றுள்ளார் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
வலிமை இயக்குநர் ஹெச் வினோத்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். தயாராக இருங்கள். வலிமை வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDDearestThalaAJITH, #AjithKumar, #NanbarAjith ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.
கவின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல. ரொம்ப ரொம்ப ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும். ஐ லவ் யூ, எத்தனை ஆயிரம் என்று எனக்கே தெரியல என்று குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ்
ஹேப்பி பர்த்டெ அஜித் சார் என்று வாழ்த்தியுள்ளார்.