Home சினிமா கோலிவுட் பாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும்: பிரபலங்கள் கோரிக்கை!

பாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும்: பிரபலங்கள் கோரிக்கை!

254
0
Bharathiraja

Bharathiraja; பாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும்: பிரபலங்கள் கோரிக்கை! இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாராதிராஜாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு திரைத்துறையில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கமல் ஹாசன், வைரமுத்து, மணிரத்னம் உள்ளிட்ட 50 சினிமா பிரபலங்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளன.

இயக்குநர் பாரதிராஜா நேற்று தனது 78 ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, கமல் ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, தனுஷ், பார்த்திபன், சேரன் என்று பலரும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் திரைப்பரங்களை இயக்கி வருபவர்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் கிட்டத்தட்ட 42 படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர். தமிழ் சினிமாவை கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்றவர்.

சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். எப்போதும், சினிமா துறைக்காகவே உழைத்து வருகிறார்.

இது போன்ற பல காரணங்களுக்காக பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்வேக் விருதை வழங்க வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here