Home சினிமா கோலிவுட் தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

292
0
Thala Ajith House Bomb Threat

Thala Ajith House Bomb Threat; தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தல ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர் தல அஜித். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, அவரது வேலையை மட்டும் பார்த்து வருகிறார்.

அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று இருப்பவர். எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால், தல அஜித். ரசிகர்கள் விரும்பினால், செல்ஃபி எடுத்து கொள்ளவும் தயங்கமாட்டார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் படங்களாக அமைந்தன.

இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அஜித் தனது 60 ஆவது படமான தல60 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

அந்த வகையில், தல அஜித் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் வீரர்களுடன் அஜித் வீட்டில் சோதனை நடத்தினர்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் மேற்கொண்ட இந்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது.

எனினும், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த நம்பரை வைத்து அது எங்கிருந்து வந்தது என்று போலீசார் கட்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, அந்த நம்பர் விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நபர் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போன்று தளபதி விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நபரும் விழுப்புரத்தை சேர்ந்த புவனேஷ் என்றும் கண்டுபிடித்தனர். ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விசாரணை தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமா பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வரும் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleலாக்டவுனில் வீட்டிலிருந்தே நடித்து நயன்தாரா!
Next articleபாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும்: பிரபலங்கள் கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here