Home சினிமா கோலிவுட் Cobra First Look Release: கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Cobra First Look Release: கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

423
0
Cobra First Look Release கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Cobra First Look Release: விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படமான கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் கடாரம் கொண்டான். இயக்குநர் ராஜேஷ்ம் எம். செல்வா இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான படம் தான் கடாரம் கொண்டான்.

இதில், விக்ரமுடன் இணைந்து அக்‌ஷரா ஹாசன், அபி ஹாசன் ஆகிய பலர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

விக்ரம் 58:

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இது விக்ரமின் 58 ஆவது படம். இதில், இவருக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கோப்ரா – Cobra First Look Release

ஹீரோயினுக்கும், கோப்ராவிற்கும் உள்ள தொடர்புதான் படத்தின் டைட்டில். அதோடு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு கச்சிதமாக இருக்கும் வகையில் தான் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் கூறியிருந்தார்.

சென்னை, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை.

கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விக்ரம் 7 விதமான கெட்டப்புகளில் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இதில், மூன்றில் இளம் வயது கதாபாத்திரம் போன்றும், நான்கில் வயதான கதாபாத்திரம் போன்றும் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இப்படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 12 விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அரசியல் தலைவர், ஏரியா தாதா, பிஸினஸ்மேன், சர்ஜ் பாதிரியார், விஞ்ஞானி, மேஜிக் மேன் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த போஸ்டருன் படம் வரும் மே மாதம் திரைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடியில் இருபுறமும் தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

கோப்ரா படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும், மகாவீர் கர்ணா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Previous article29/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleTechofes 2020 Awards: அட்லி சிறந்த இயக்குநர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here