Home சினிமா கோலிவுட் நகைச்சுவை எழுத்தாளர் சதீஷ் பர்த்டே டுடே!

நகைச்சுவை எழுத்தாளர் சதீஷ் பர்த்டே டுடே!

0
294
Sathish Birthday

Sathish; நகைச்சுவை எழுத்தாளர் சதீஷ் பர்த்டே டுடே! நகைச்சுவை எழுத்தாளரும், காமெடி நடிகருமான சதீஷ் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சதீஷ் பிறந்தநாள் இன்று Happy Birthday Sathish.

கடந்த 1987 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி சேலம் மாவட்டம் எலம்பிள்ளை என்ற பகுதியில் பிறந்தவர் நடிகர் சதீஷ்.

நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பின்னணி பாடகராகவும், காமெடியனாகவும் திகழ்கிறார்.

கிட்டத்தட்ட 8 வருடங்களாக கிரேஸி மோகனின் நாடகங்களுக்கு நகைச்சுவை எழுதி வந்த வசனகர்த்தா. அதன் பிறகு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்த பொய் சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் துணை டயலாக் எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வந்த ஜெர்ரி என்ற படத்தில் இரண்டு ஷாட்டுக்கு வந்து சென்றவர் நடிகர் சதீஷ். அதன் பிறகு தமிழ் படம், கொல கொலயா முந்திரிக்கா, மதராசபட்டினம், வாகை சூடவா, மகான் கணக்கு,

மாலை பொழுதின் மயக்கத்திலே, தாண்டவம், வத்திக்குச்சி, கத்தி, ஆம்பள, தேவி, றெக்க, ரெமோ, சத்யா, வேலைக்காரன் என்று இவரது படங்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தளபதி விஜய், சமந்தா நடித்த கத்தி படத்திலும், விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படத்திலும் காமெடியில் கலக்கியிருப்பவர் நடிகர் சதீஷ்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த மெரினா படம் முதல் மிஸ்டர் லோக்கல் வரை பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியுள்ளார்.

மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, ரெமோ, மிஸ்டர் லோக்கல், காக்கிச் சட்டை என்று சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சந்தானத்திற்கு அடுத்த வரிசையில், நகரத்து காமெடி ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பவர் நம்ம சதீஷ் மட்டும்தான்.

சிவா நடிப்பில் வந்த தமிழ் படம் 2 படத்தில் தன்னை ஒரு காமெடியனாகவும், நடிகனாகவும் நிரூபித்துக் காட்டியவர். ஆம், ஒரே படத்தில் பெண் வேடம் முதல் 2.0 பஷி ராஜன் வரை பல வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு நடத்தி அசத்தியிருப்பார்.

தளபதி விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா, கௌதம் கார்த்திக், தனுஷ் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள சதீஷ், அண்மையில், சிந்துவை திருமணம் செய்துள்ளார்.

அவருக்கு கல்யாண பரிசாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவ்வளவு ஏன், பிக் பாஸ் பிரபலம் லோஸ்லியா, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், ஹர்பஜன் சிங் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ப்ரெண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், காமெடி நடிகர் சதீஷ் இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here