Home Latest News Tamil மோடி முன் தில்லாக சக்மாவின் இடுப்பை தடவிய அமைச்சர் – வீடியோ

மோடி முன் தில்லாக சக்மாவின் இடுப்பை தடவிய அமைச்சர் – வீடியோ

1059
0
மோடி முன்

மோடி முன் தில்லாக சக்மாவின் இடுப்பை தடவிய அமைச்சர் – வீடியோ

திரிபுரா மாநிலத்தில் பிரமர் நரேந்திர மோடி, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அகர்தலா பகுதியில் பாஜக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

திரிபுரா ஆளுநர் கப்தான் சிங், முதலைமைச்சர் பிப்லப் தேவ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது கல்வெட்டு ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மோடி கல்வெட்டை திறக்கும் முன், ஒரு பக்கமாக இருந்த அமைச்சர்கள் சிலரை எதிர்புறமாக செல்லச் சொன்னார்.

திரிபுரா விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி, சமூக நலத்துறை அமைச்சர் சாந்தனா சக்மா ஆகியோர் எதிர்புறம் சென்றனர்.

மோடி கல்வெட்டை திறந்து கொண்டிருந்தபோது, அமைச்சர் மனோஜ் காந்தி அருகில் நின்று இருந்த பெண் அமைச்சர் சாந்தனா சக்மாவை உரசிக்கொண்டு நின்றார்.

ஏதோ கூட்ட நெரிசல் மிகுதியில் நிற்பது போன்றே பெண்ணின் பின்பக்கத்தில் இடித்துக்கொண்டே இருந்தார். மேலும் இடுப்பில் கையை வைத்து தடவினார்.

பொது இடம் என்பதால் சக்மா எந்தவித ரியாக்சனும் கொடுக்காமல் நைசாக அவரது கையைத் தட்டிவிட்டார்.

ஆனால் இது கேமராவில் நன்கு பதிவாகிவிட்டது. தேர்தல் நேரம் என்பதால் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மனோஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.  இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் அமைச்சர் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை.

இருவருக்கும் ஏற்கனவே நெருக்கமான தொடர்பு இருந்திருக்கலாம், அதன் காரணமாகவே மேடையில் நெருக்கமாக இருந்திருப்பார் என சிலர் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

Previous articleசென்னைக்கு மீண்டும் நிலநடுக்க அபாயம்? ஒரே இடத்தில் 4 முறை ஏற்பட்டுள்ளது!
Next articleகிட்னி, கண், இதயம் திருட்டு? நடிகை சந்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here