Home சினிமா கோலிவுட் முடி வெட்டி ஷேவ் செய்றேன் என்ற பேருல இப்படி சித்ரவதை செஞ்ச சதீஷ்?

முடி வெட்டி ஷேவ் செய்றேன் என்ற பேருல இப்படி சித்ரவதை செஞ்ச சதீஷ்?

449
0
Sathish Haircut Video

Sathish With His Father; முடி வெட்டி ஷேவ் செய்றேன் என்ற பேருல இப்படி சித்ரவதை செஞ்ச சதீஷ்? காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய அப்பாவுக்கு முடிவெட்டி ஷேவ் செய்து அழகு பார்த்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சதீஷ் தனது அப்பாவிற்கு முடிவெட்டி, ஷேவ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுனில் சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே பிஸியாக இருக்கின்றனர்.

ஆம், சமையல் செய்வது, உடற்பயிற்சி, யோகா, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, தோட்டவேலை பார்ப்பது, விவசாயம் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில் எல்லோரையும் கிண்டலடித்துக் கொண்டிருக்கும் காமெடி நடிகர் சதீஷ் தனது அப்பாவையும் விட்டு வைக்கவில்லை.

முடிவெட்டி ஷேவ் செய்யுறேன் என்ற பெயரில் அவரது கன்னத்தில் ரத்தக் கறையை ஏற்படுத்தியுள்ளார். அதன் பிறகு அதை துடைத்துவிட்டு அனைவருக்கும் வணக்கம் சொல்லியுள்ளார்.

Sathish Haircut Video

ஆம், முடி திருத்தம் செய்யும் சலூன் கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ள நிலையில், சதீஷ், தனது அப்பாவிற்கு முடி வெட்டி, ஷேவ் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா முடி வெட்டி, ஷேவ் செய்து டை அடித்துவிட்டு நகம் கட் செய்த வீடியோவை விஜயகாந்த் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும், இயக்குநர் பேரரசுவுக்கு அவரது மகள் முடி வெட்டிவிடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here