காதலர்கள் மனதளவில் நெருக்கமாவது எப்படி? நெருக்கமாக காதல் செய்வது எப்படி? சண்டையில்லாமல் காதல் புரிவது எப்படி? – love tips tamil
பொதுவாக காதலிப்போரில் பெரும்பாலானோர் மனதளவில் நெருக்கமாவதில்லை. இதனாலேயே அநேகக் காதல், தோல்வியில் முடிகின்றன.
மனதிலும் உடலிலும் நெருக்கமாவது என்று கூறியவுடன் நம்முடைய எண்ணங்கள் முத்தம், உடலுறவு என்றுதான் செல்லும்.
ஆனால் அது இல்லை. காதலர்களின் ஒரே மாதிரியான எண்ணங்கள், புரிதல்களைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.
நாங்கள் பரிந்துரை செய்யும் ஒரு சில கேள்விகளை மட்டும் உங்கள் காதல் ஜோடியிடம் கேட்டுப்பாருங்கள்.
அதற்கான பதில் உங்கள் காதலை இன்னும் வலுப்படுத்தும். மேலும் இதுபோன்ற கேள்விகள் உங்கள் காதலை இனிமையாக்கும்.
தேவைக்கு அதிகமான பணம் மற்றும் நேரம் உன்னிடம் இருந்தால் நீ என்ன செய்வாய்?
இன்றைய காலக்கட்டதில் நிம்மதியாக இரண்டு வார்த்தை பேசக்கூட நேரம் இல்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
இதில் நேரத்திற்கும், பணத்திற்கும் அதிக அக்கறை கொடுக்காத பொழுது வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று பேச ஆரம்பித்தால் உங்கள் இருவருடைய எதிர்காலத்தை நோக்கிய புரிதல் அதிகமாகும்.
உன்னுடைய வாழ்க்கையின் மறுபாதி நான் என்று எப்பொழுது நீ உணர்ந்தாய் ?
இது மற்றொரு ஆர்வமான கேள்வி ஆகும். உங்களுடைய ஜோடியின் உண்மையான மன உணர்வை உங்களால் தெரிந்துகொள்ள இயலும்.
எந்த நிகழ்வில் இந்த ஒரு அழகான எண்ணம் மனதில் வந்தது போன்ற அருமையான விசயங்களை தெரிந்துகொள்ள இயலும்.
இருவருக்கிடையில் நடந்த மிகப்பிடித்த நிகழ்வு?
மறக்க முடியாத அல்லது மிகப்பிடித்த நிகழ்வு என்று பேச ஆரம்பிக்கும் பொழுது மிக அழகான சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் திரும்பப்பார்க்கலாம்.
எவ்வளவு தூரம்… எவ்வளவு காலம்… நீங்கள் பயணித்தீர்கள் என்று பேசுவது உரையாடலை மேலும் சுவாரஸ்யப்படுத்தும்.
கடைசியாக நான் என்ன செய்தபோது, அதை நீ ரசித்தாய்?
நீங்கள் செய்த ஒவ்வொரு சிறு செயல்களையும் உங்கள் காதலர் கூறும் பொழுது, இது பிடித்தது; இதை நான் ரசித்தேன் என்று பேசி மிகவும் அழகான, ரசனையான உரையாடல்களை துவங்கலாம்.
கடைசியாக நீ அழுதது எப்பொழுது?
இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் உங்கள் காதலரின் ஆழ்மனதை புரிந்து கொள்ள இயலும். மேலும், எந்த விசயத்தில் உங்கள் காதலர் பலவீனமானவர் என்று தெரிந்துகொள்ள இயலும்.
காதலை மேலும் வலுப்படுத்த நாம் என்ன செய்யலாம் ?
உங்கள் இருவருக்கிடையே இருக்கும் குறைகளை சரி செய்யவும், இருவருக்கும் ஏற்றவாறு மேலும் சில மாற்றங்களை உங்களுக்கிடையே ஏற்படுத்திக்கொள்ள இக்கேள்வி உதவும்.
ஒரு நாளின் இறுதியை சிறப்பாக முடிப்பது எப்படி?
கொஞ்சம் வில்லங்கமான கேள்வி இது. இதற்கு நீங்கள் சில குறும்பான பதில்களை எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற உரையாடல்களை மேற்கொள்ளும்போது மட்டுமே உங்கள் காதல் மிகவும் நெருக்கமாக இருக்கும்.
Love tips tamil
இதுபோன்ற கேள்விகள் காதலர்கள் மனதளவில் நெருக்கமாவது எப்படி? நெருக்கமாக காதல் செய்வது எப்படி? சண்டையில்லாமல் காதல் புரிவது எப்படி? மற்றும் அதற்கான பதில்கள்.
நீங்கள் எந்த அளவு உங்கள் காதலியுடன் நெருக்கமாக இருக்கப்போகின்றீர்கள் என்பதை மேம்படுத்தும்..