Sathish Twitter Video; ஒரு நல்ல மாணவர்களை உருவாக்குவேன்: ஒரு ஆசிரியரின் சபதம்! சதீஷ் தனது அபார்ட்மெண்டில் செக்யூரிட்டி வேலை செய்த தமிழ் ஆசிரியரை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.
காமெடி நடிகர் சதீஷ் (Sathish Twitter Video)வீட்டு அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டியாக இருந்தவர் தமிழ் ஆசிரியராக மாறியதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ். விஜய், ஆர்யா, சிவகார்த்திகேயன், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அண்ணாத்த, இந்தியன் 2 ஆகிய படங்களில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். நான் இப்போது இன்ஸ்பிரேஷனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
அவர் எங்களது அபார்ட்மெண்டில் செக்யூரிட்டி வேலை செய்கிறார். அவரது பெயர் பாலுச்சாமி. இன்னும், ஒரு மாதம் மட்டுமே வேலைக்கு வருவேன்.
அதன் பிறகு வேலம்மாள் பள்ளியில் வேலைக்கு சேருகிறேன் என்றார். நான் சரி, அங்கேயும் செக்யூரிட்டி வேலை என்று தான் நினைத்தேன்.
ஆனால், தமிழ் வாத்தியாராக வேலைக்கு சேருகிறேன். அதுவும், 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறேன் என்றார்.
அவர் பேசியதை கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியம். அவர் படித்தது எம்பிஏ., பிஎட் எம்.பில். அவ்வளது தூரம் படித்து முடித்துவிட்டு, இங்கு வந்து வேறொரு நல்ல வேலை கிடைக்கும் வரை செக்யூரிட்டியாக வேலை செய்திருக்கிறார் என்றார்.
அதன் பிறகு பேசிய பாலுச்சாமி கூறுகையில், ஒரு வேலையில் இருந்து கொண்டு இன்னொரு வேலை தேடுவது தான் புத்திசாலித்தனம். அது போல எனக்கு வேலம்மாள் பள்ளியில் கிடைத்த வேலை எனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்.
அந்த திறமையை பயன்படுத்தி வருங்காலத்தில் நல்ல மாணவர்களை இந்த சமுதாயத்தில் உருவாக்குவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.