Home சினிமா கோலிவுட் கொடை வள்ளல் அக்‌ஷய் குமார்: முதல ரூ.25 கோடி, இப்போ ரூ.3 கோடி!

கொடை வள்ளல் அக்‌ஷய் குமார்: முதல ரூ.25 கோடி, இப்போ ரூ.3 கோடி!

996
0
Akshay Kumar Rs 3 Crore Donation

Akshay Kumar 3 Crore Donation; கொடை வள்ளல் அக்‌ஷய் குமார்: முதல ரூ.25 கோடி, இப்போ ரூ.3 கோடி! பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி அளித்திருந்த நிலையில், தற்போது மும்பை மாநகராட்சிக்கு ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

அக்‌ஷய் குமார் தற்போது மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் மட்டும் 206 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், பவன் கல்யாண், பிரபாஸ், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, சிரஞ்சீவி என்று மாஸ் நடிகர்கள் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி அளித்திருந்தார்.

இந்த நிலையில், மறுபடியும் ரூ.3 கோடியை மும்பை மாநகராட்சிக்கு கொடுத்துள்ளார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், வேகப் பரிசோதனைக் கருவிகள், முகக் கவசங்கள், ஆகியவற்றின் உற்பத்திக்காக மும்பை மாநகராட்சிக்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.3 கோடி நிதி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் மற்றும் எனனைச் சார்ந்தவர்களின் சார்பாக காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வீட்டுக் காவலர்கள் என்று அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது சங்கீத் சேது SangeetSetu என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுக்க இருக்கிறார்.

இந்த சங்கீத நிகழ்ச்சி நேற்று முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. SangeetSetu – A Virtual Concert Series நாளையுடன் இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here