Dhanush; நாளை மாலை 5 மணிக்கு கைதட்டி ஆரவாரம் செய்வோம்! கொரோனா வைரஸ் குறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து வீடியோ (Corona Virus Video) பதிவிட்டுள்ளார். உலக நாடுகளே அஞ்சும் அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய இந்த தொற்று நோய் கிருமியிடமிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
அதற்காக நாம் வீட்டை விட்டு (Janta Curfew) வெளியில் வராமல் இருப்பது நல்லது தான்.
உலகத்தை கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் வரும் நிலையில். சீனாவில் தொடங்கி நூறு நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது.
தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் (COVID19) தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில், நாம் அனைவரும் அடிக்கடி கை கழுவி கொள்ள வேண்டும்.
வீட்டிற்குள்ளாகவே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா வைரஸின் ஆயுள்காலம் வெறும் 12 மணிநேரம் மட்டுமே.
அதன் பிறகு தானாகவே இறந்துவிடும். அந்த 12 மணி நேரத்திற்குள்ளாக ஒருவரது உடலுக்குள் நுழைந்து அவரது உடலிலிருந்து மற்
றவர்களது உடலுக்கு பரவும். இதுதான் கொரோனா வைரஸின் செயின்.
இந்த ஒருநாள் அதான் நாளை மார்ச் 22 ஆம் தேதி ஒவ்வொருவரது நோக்கமும் கொரோனா பரவுவதை தடுப்பது தான்.
ஆதலால், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட 14 மணிநேரம் யாருமே வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்றால், அங்கங்கு இருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எந்த உடலும் கிடைக்காமல் தானாகவே இறந்துவிடும்.
இது போன்று செய்தி வெளியாகி வரும் நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படியொரு சூழ்நிலை வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நமது கையில் தான் இருக்கிறது.
ஜந்தா கர்பியூ (Janta Curfew – மக்கள் ஊரடங்கு) பிரதமர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, நாம் யாரும் வீட்டில் இருந்து வெளியில் வராமல் இருக்க வேண்டும்.
அப்படி வராமல் இருந்தால், இந்த கொரோனாவை எதிர்த்து மருத்துவர்களும், அரசும் போராடுவதற்கு உதவியாக இருக்கும்.
டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோர் அவர்களது உயிரை மட்டும் பணையம் வைத்து போராடவில்லை.
அவர்களது குடும்பத்தினரையும், குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோரது உயிரையும் பணையம் வைத்துதான் போராடுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்காகவும் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அனைவருமே வீட்டில் இருப்பதுதான்.
இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்தால் கூட, தேவைப்பட்டால் மட்டுமே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வீட்டில் இருந்து வெளியில் செல்வோம்.
இளைஞர்கள் பலரும் எங்களுக்கு என்ன ஆகும்? அதெல்லாம் ஒன்றும் செய்யாது என்ற அஜாக்கிரதையும், கவனக்குறைவும் இருப்பதாக கேள்விப்படுகிறேன்.
நீங்கள் அப்படியிருப்பதால், உங்களது குடும்பத்தினருக்கே கொரோனாவை பரப்பும் ஒருவராக மாறிவிடுகிறீர்கள்.
அரசும், மருத்துவர்களும் என்னவெல்லாம் பாதுகாப்பு குறித்து கூறியிருக்கிறார்களோ அதையே பின்பற்றுங்கள். நாமும் பாதுகாப்பாக இருப்போம்.
மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். நாளை மாலை 5 மணிக்கு நமக்காக போராடும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்காக கதவு முன்பாகவோ, அல்லது ஜன்னல் முன்பாகவே நின்று கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களுக்கு நமது ஆதரவை வெளிப்படுத்துவோம்.
ஜெய்ஹிந்த்! என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.