Home சினிமா கோலிவுட் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா தொற்று!

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா தொற்று!

262
0
Dhruva Sarja and his Wife Prerana

Dhruva Sarja COVID 19; மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா தொற்று! அண்மையில், திடீரென்று உயிரிழந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் துருவா சார்ஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினரும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சோகமே இன்னும் மீளாத நிலையில், அதற்குள் கன்னட திரையுலகில் மற்றொரு அதிர்ச்சி செய்து கிடைத்துள்ளது.

சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜூனின் சகோதரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு சிறிய அறிகுறிகள் இருக்கிறது.

விரைவில், நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ அவர்கள் எல்லாம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here