Home சினிமா கோலிவுட் ரஜினியை ஆட்டம் போட வச்ச இயக்குநருக்கு பிறந்தநாள்!

ரஜினியை ஆட்டம் போட வச்ச இயக்குநருக்கு பிறந்தநாள்!

315
0
Karthik Subbaraj Birthday

Karthik Subbaraj; ரஜினியை ஆட்டம் போட வச்ச இயக்குநருக்கு பிறந்தநாள்! பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மதுரையில் உள்ள எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த கார்த்திக் சுப்புராஜ், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் முடித்தார்.

காட்சிப்பிழை என்ற குறும்படத்தின் மூலம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

பீட்சா படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். தொடர்ந்து ஜிகர்தண்டா, பென்ஞ் டாக்கீஸ், இறைவி, மெர்குரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை கொடுத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பேட்ட படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் மூலம் ரஜினியை ஆட்டம் போட வைத்தார்.

பேட்ட மரண மாஸ், உல்லால்லா ஆகிய பாடல்களுக்கு ரஜினியை டான்ஸ் ஆட வைத்திருப்பார். பேட்ட படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரது மருமகன் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு இயக்குநரைத் தொடர்ந்து, சூது கவ்வும் படத்தில் நடிக்கவும் செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அவியல், மேயாத மான், கள்ளச்சிரிப்பு ஆகிய படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் நாமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்…

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற ரியலாக களத்தில் குதித்த சூர்யா
Next articleFacebook Dark Mode வந்துவிட்டது ஆக்ட்டிவேட் செய்வது எப்படி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here