Home சினிமா கோலிவுட் ரஜினியின் பேட்ட 2 ஆம் பாகமா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

ரஜினியின் பேட்ட 2 ஆம் பாகமா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

293
0
Petta 2

Petta 2; ரஜினியின் பேட்ட 2 ஆம் பாகமா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்! ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்பது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

பேட்ட வெளியான போது, பேட்ட 2 ஆம் பாகம் குறித்து பலரும் தன்னிடம் கேட்டதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், மாளவிகா மோகனன், சசிகுமார் ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பேட்ட.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவதாரம் எடுத்தார். மேலும், இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக் உடன் இணைந்து ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் உருவாவது பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், படம் எடுக்கும் போது பேட்ட படத்தின் 2 ஆம் பாகம் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.

ஆனால், படம் வெளியான பிறகு படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் 2 ஆம் பாகத்திற்கு இருந்த சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை நினைக்கும் போதே சுவாரஸ்யமாக இருந்தது.

என்னிடம் பேட்ட 2 ஆம் பாகம் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். ஒரு சிலர் பேட்ட படம் இப்படி எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனைகள் கொடுத்தார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் பேட்ட 2 பற்றி ஐடியாவும் சிலர் கொடுத்தார்கள். ஆனால், இப்போதைக்கு பேட்ட 2 படத்திற்கான கதை இல்லை. எதிர்காலத்தில் அது நடக்க வாய்ப்பிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான அடிஷி மர்லேலா விற்கு கொரோனா தொற்று : டெல்லி
Next articleசென்னை உட்பட 4 மாவட்டங்களில் வெள்ளி முதல் 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு: தலைமை செயலர் கே. சண்முகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here