Home சினிமா கோலிவுட் ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் காலா இயக்குநர்! குழந்தைக்கு இப்படியொரு பெயரா?

ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் காலா இயக்குநர்! குழந்தைக்கு இப்படியொரு பெயரா?

323
0
Pa Ranjith Boy Baby

Pa Ranjith; மகன் பிறந்த சந்தோஷத்தில் காலா இயக்குநர்! இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அனிதா தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு மிளிரன் (Miliran) என்று பெயர் வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். உதவி இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார்.

தகப்பன்சாமி படத்தில் சிவ சண்முகத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.

அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு வந்த அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து கொண்டார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கார்த்தியின் மெட்ராஸ் படத்தை கொடுத்தார்.

இப்படம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாக பேசப்பட்டது. அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு மூலம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.

ஆம், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார். உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு, வசூல் கொடுக்கவே மீண்டும் ரஜினியுடன் இணைந்து காலா படத்தை கொடுத்தார்.

ஒரு இயக்குநரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நீலம் புரோடக்‌ஷன் மூலம் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது.

அப்புறம், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தையும் தயாரித்துள்ளார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சல்பேட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பாக்ஸராக ஆர்யா நடிக்கிறார். அதற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனக்கு மகன் பிறந்த செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். மேலும், மகனுக்கு மிளிரன் என்று பெயர் வைத்துள்ளார். மிளிரன் என்றால் ஜொலிப்பவன் என்று பெயர். மேலும், மிளிரன் என்றால் புத்தன் என்றும் கூறப்படுகிறது.

பா.ரஞ்சித் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பா.ரஞ்சித் மற்றும் அனிதா தம்பதியினருக்கு மகிழினி என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here