Thala Ajith Dhaksha Drone; அஜித்தின் ஐடியா வைரல்: அஜித்துக்கு நன்றி தெரிவித்த டாக்டர் கார்த்திக்! கொரோனாவை ஒழிப்பதற்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தல அஜித்தின் தக்ஷா குழுவுக்கு டாக்டர் கார்த்திக் (LIT Skills Learning) நன்றி தெரிவித்துள்ளார்.
தல அஜித்துக்கு டாக்டர் கார்த்திக் (LIT Skills Learning) நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கார், பைக் ரேஸ் என்று அனைத்திலும் கலக்கும் வல்லமை படைத்தவர். தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், தக்ஷா குழு மூலமாக ட்ரோன் உருவாக்கி பல சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது இந்த தக்ஷா குழு புதிய முயற்சியில் ஈடுபட இருக்கிறது.
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரையில் இந்த ஊரங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 866 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சென்னையில் மட்டும் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 2,865 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில், தற்போது தக்ஷா குழுவினர் ஈடுபட இருக்கின்றனர்.
ஆம், மருத்துவமனை உள்ளிட்ட மிக நெரிசலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு தல அஜித் தலைமையிலான தக்ஷா குழுவினர் முன் வந்துள்ளனர். இதன் காரணமாக #AJITHLedDroneToFightCorona என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே, தக்ஷா குழுவினர், கடந்த மார்ச் மாதம், 3 லட்சம் சதுர கிமீ பரப்பளவு சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலமாக கிட்டத்தட்ட 900 லிட்டர் கிருமி நாசினை தெளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மறுபடியும் தக்ஷா குழுவினர் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கொரோனாவை ஒழிப்பதற்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தல அஜித்தின் தக்ஷா குழுவுக்கு டாக்டர் கார்த்திக் (LIT Skills Learning) நன்றி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஹலோவில் அஜித்தின் ஐடியா வைரல் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.