Home சினிமா கோலிவுட் இளையராஜாவின் ஆஸ்தான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்!

இளையராஜாவின் ஆஸ்தான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்!

547
0
Drummer Purushothaman

Drummer Purushothaman passed away; இளையராஜாவின் ஆஸ்தான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்! இளையராஜாவின் அன்னக்கிளி படத்தில் தொடங்கி தொடர்ந்து அவரது குழுவில் ட்ரம்ஸ் வாசித்து வந்த இசைக்கலைஞர் புருஷோத்தமன் நேற்று காலமானார்.

இளையராஜாவின் இசைக்குழுவில் ஆஸ்தான இசைக்கலைஞரான புருஷோத்தமன் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இசையுலகில் தனக்கென்று ஒடு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா.

காதல், சோகம், சந்தோஷம், துக்கம், தாலாட்டு, குடும்பம், வலி, என்று எந்த உணர்வாக இருந்தாலும் அதற்கு இளையராஜாவின் இசைதான் அனைவருக்குமே மருந்து.

இவரது இசைக்குழுவில் ஒருவராக இருந்தவர் ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன். இளையராஜா இசையமைத்த அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம், அவருடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது 70 வயதாகும் புருஷோத்தமன் ரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். ராஜாவின் இசைக்குழுவில் ட்ரம்ஸ் வாசிப்பவராகவும், மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ராஜாவுடன் இணைவதற்கு முன்னதாக, திவாகர், கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவ்வளவு ஏன், நிழல்கள் படத்தில் வரும் மடை திறந்து என்ற பாடலில் ட்ரம்மராகவும் நடிக்கவும் செய்துள்ளார்.

மேகம் கொட்டட்டும், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள, காதல் மகராணி, நினைவோ ஒரு பறவை என்று ஏராளமான பாடல்களுக்கு ட்ரம்ஸ் வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புருஷோத்தமனின் மனைவி காலமானார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.

இந்த நிலையில், தொடர்ந்து ரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

அவரது மறைவு இளையராஜாவுக்கு மட்டுமல்ல இசை பிரியர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புருஷோத்தமனின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Purushothaman Passed Away

SOURCER SIVAKUMAR
Previous article10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: பள்ளி கல்வித்துறை
Next articleபொன்மகள் வந்தாள் டிரைலர் எப்போது வெளியாகும் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here