Home சினிமா கோலிவுட் பிறந்தநாள் அதுமா இப்படி செஞ்சிட்டாரே: பாராட்டப்படும் பிரகாஷ் ராஜ்!

பிறந்தநாள் அதுமா இப்படி செஞ்சிட்டாரே: பாராட்டப்படும் பிரகாஷ் ராஜ்!

348
0
Prakash Raj Birthday

Prakash Raj; பிறந்தநாள் அதுமா இப்படி செஞ்சிட்டாரே: பாராட்டப்படும் பிரகாஷ் ராஜ்! தனது பிறந்தநாளான இன்று நடிகர் பிரகாஷ் ராஜ் கொரோனா வைரஸ் காரணமாக பரிதவித்த 11 பேருக்கு தனது தோட்டத்தில் அவர்களுக்கு தங்கும் வசதியை அமைத்துக் கொடுத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கடந்த 1955 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.

இவரது தாய்மொழி கன்னடம். ஆனால், பிரகாஷ் ராஜின் அப்பா துலுவா பேசக்கூடியவர். (துலு நாடு) பிரகாஷ் ராஜ் முதலில் லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மேக்னா மற்றும் பூஜா என்று இரு மகள்களும், சிது என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் போனி வெர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தரின் டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

கில்லியில் முத்துப்பாண்டியாக மதுரை கோட்டையை பிடித்தார். அந்நியன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், போக்கிரி, வில்லு, வானவில், ஆசை, கல்கி என்று பல படங்களில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

தான் ஒரு வில்லன் என்பதையும் தாண்டி, சிறந்த குணச்சித்திர நடிகர், ஹீரோ என்று தன்னை நிரூபித்துக் காண்டியுள்ளார். இவ்வளவு ஏன், 2000 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, சமூக அக்கறை கொண்டவர் என்பதையும் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.

ஆம், கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், 25 கிலோ என்ற வகையில் 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 55 ஆவது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். அதோடு, தனது பிறந்தநாளை பயனுள்ளதாக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளார்.

அந்த வகையில், கொரோனா வைரஸ் காரணமாக தங்குவதற்கு வீடுகள் இன்றி தவித்த 11 பேருக்கு தங்கும் வசதி அமைத்துக் கொடுத்துள்ளார்.

பாண்டிச்சேரியில் உள்ள தனது தோட்டத்தில் 11 பேருக்கு தங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தும் நிலையில், வீடுகள் இல்லாதவர்கள் எப்படி வீட்டுக்குள் இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 11 பேருக்கு தங்குவதற்கு வசதியும் அமைத்துக் கொடுத்து அவர்களை வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பிரகாஷ் ராஜின் இந்த செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதோடு, இது போன்ற கஷ்ட காலங்களில், அரசு எல்லா விஷயத்தையும் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

மாறாக, உங்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை பிறருக்கு செய்து உதவி செய்ய வேண்டும்.

இது அனைவரது கடமை என்றும், ஒவ்வொரு பிரபலங்களும், பணம் படைத்த நல்ல உள்ளங்களும் இது போன்று வீடு இல்லாதவர்களுக்கு உதவி செய்யலாமே என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleரெட்மி K30 Pro | கம்மி விலையில் இவ்ளோ இருக்குதா | முழு விவரங்கள்
Next articleதமிழ்நாட்டில் கொரோனா எந்தெந்த இடத்தில் எவ்வளவு பாதிப்பு ரிப்போர்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here