Home சினிமா கோலிவுட் விஜய் பிறந்தநாளை ஜூன் 22 தமிழன் திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள்!

விஜய் பிறந்தநாளை ஜூன் 22 தமிழன் திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள்!

358
0
Thalapathy Vijay Birthday

Thalapathy Vijay; விஜய் பிறந்தநாளை ஜூன் 22 தமிழன் திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள்! வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அன்றைய நாளை தமிழன் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.

ஜூன் 22 ஆம் தேதியை தமிழன் திருவிழாவாக விஜய் ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். இதுவரை 64 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள தளபதி64 படமான மாஸ்டர் கடந்த 14 ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வருங்கால முதல்வர், நாளைய தமிழகம், மக்களால் நீ, மக்களுக்காகவே நீ, நாளை நமதே தலைவா, நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, அரசியலுக்கு வராவிட்டால் பெரியார் என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த வருடம் இதை விட கொஞ்சம் அட்வான்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அண்மையில், விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இது அவருக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலிதான் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது ஒன்று திரண்ட மக்கள் கூட்டம். இதைப் பார்த்து தமிழக அரசியல் பிரபலங்கள் பலரும் ஆடிப்போன நிலை வந்தது.

எப்போது விஜய் பிறந்தநாள் வரும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். காரணம், மாஸ்டர் ரிலீஸ், வருமான வரித்துறை சோதனை எல்லாவற்றிற்கும் பதில் கொடுக்கத்தான்.

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால், முதல் முறையாக அன்றைய தினத்தை ரசிகர்கள் ஜூன்22தமிழன்திருவிழாவாக கொண்டாட இருக்கின்றனர்.

இதன் காரணமாக ஜூன்22தமிழன்திருவிழா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleBest First Look Poster? சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது?
Next articleஃபெப்சி, தலைவி படக்குழுவுக்கு கங்கனா ரணாவத் நிதியுதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here