Home சினிமா கோலிவுட் இசையமைப்பாளர் GVPrakash சைந்தவி திருமண நாள்!

இசையமைப்பாளர் GVPrakash சைந்தவி திருமண நாள்!

305
0
GV Prakash Wedding Anniversary

GV Prakash Wedding Anniversary; இசையமைப்பாளர் GVPrakash சைந்தவி திருமண நாள்! இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் இன்று தங்களது 7 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி வெங்கடேஷ் மற்றும் பின்னணி பாடகி ரெஹானா தம்பதியினருக்கு மகனாக சென்னையில் பிறந்தவர் நடிகர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவரது தாய்மாமா.

ஷங்கர் இயக்கத்தில் வந்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை. இவரது இசையில், சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடியுள்ளார்.

இது போன்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இதே போன்று, ஹரிஷ் ஜெயராஜ் இசையிலும் பாடல் பாடியுள்ளார். குறிப்பாக அந்நியன் மற்றும் உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, ஓரம் போ, கிரீடம், பொல்லாதவன், குசேலன், அங்காடி தெரு,

ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, சகுனி, பரதேசி, தாண்டவம், ராஜா ராணி, தலைவா, பென்சில், காக்கா முட்டை, விசாரணை, தெறி,

வாட்ச்மேன், 100% காதல், ஜெயில், சூரரைப் போற்று, ஐங்கரன், காதலிக்க யாருமில்லை, தலைவி என்று ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதே போன்று, குசேலன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், புரூஷ் லீ, செம, சர்வம் தாளம் மாயம், குப்பத்து ராஜா, நாச்சியார்,

100% காதல் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி சைந்தவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சைந்தவி பின்னணி பாடகி. கர்நாடக இசை பயின்றுள்ளார்.

அந்நியன் படத்தில் வரும் அண்டக்காக்கா கொண்டக்காரி என்ற பாடலை இவர் பாடியுள்ளார். இது போன்று தமிழ் சினிமாவில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

அண்மையில், வெளியான பொன்மகள் வந்தாள் படத்தில் வரும் வானமே நான் என்ற பாடலை சைந்தவி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜிவிபிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் இன்று தங்களது 7 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

GVPrakash திருமண நாள்

Previous articleகொரோனா பரவலை தடுக்க செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என அரசு அறிவித்துள்ள பட்டியல்
Next articleஹலோவில் டிரெண்டாகும் GVPrakash சைந்தவி பாடல்கள் ஹேஷ்டேக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here