Home சினிமா கோலிவுட் விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் சகோதரி பவானி ஸ்ரீ!

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் சகோதரி பவானி ஸ்ரீ!

418
0
GV Prakash Sister Debut Movie

Bhavani Sre; விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் சகோதரி பவானி ஸ்ரீ! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் க/பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் சகோதரி கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் பெ. விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், யோகி பாபு, சமுத்திரக்கனி, பூ ராம் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். காட்பாடி ஜே ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கை விலங்கு போடப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இருவருக்கும் பின்புறம் காலிக்குடங்களுடன் பெண்களும் வயதானவர்களும் இருப்பது போன்று   க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைக் கதையைக் கொண்ட இந்தப் படம் நீதி, நேர்மை, நியாயம், சரி எது, தவறு எது, சமத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த டீசரில், சாதி, மத அரசியலைத் தாண்டி இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துதான் மொத்த உலக அரசியல் நடக்கும் என்று விஜய் சேதுபதி அரசியல் வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீயும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

ஆம், டீசரில் அரசு அதிகாரியுடன் பேசுவதற்கு கூட்டமாக அமர்ந்து போராடுவது போன்று காட்டப்பட்டுள்ள டீசரில் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீயும் இடம்பெற்றுள்ளார்.

பவானி ஸ்ரீ விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளதைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவியும், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது மைத்துனி பவானி ஸ்ரீ அறிமுகமான க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் இது. பெருமையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள். உங்களது விருப்பங்களும், கனவுகளும் நனவாகட்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here