Home சினிமா கோலிவுட் என்னது எனக்கு கல்யாணமா? ஷாக்கான ஹன்சிகா மோத்வானி!

என்னது எனக்கு கல்யாணமா? ஷாக்கான ஹன்சிகா மோத்வானி!

0
332
Hansika Motwani Wedding

Hansika Motwani; என்னது எனக்கு கல்யாணமா? ஷாக்கான ஹன்சிகா மோத்வானி! தனக்கு விரைல் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவல் அறிந்து நடிகை ஹன்சிகா மோத்வானி அதிர்ச்சியடைந்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக  திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சாமி 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, புலி, அரண்மனை 2, மனிதன், போகன், குலேபகாவலி, துப்பாக்கி முனை, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஹன்சிகாவின் 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில், சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

மஹா படத்தைத் தொடர்ந்து பார்ட்னர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி, தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதோடு ஒல்லியாகவும் மாறியுள்ளார்.

இந்த நிலையில், ஹன்சிகாவிற்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று டுவிட்டரில் செய்தி வெளியானது. இதைக் கண்ட ஹன்சிகா மோத்வானி அடக்கடவுளே…! அவர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஒருவர் ஏன் என்கிட்ட சொல்லலனு கேட்டதற்கு எனக்கே இப்போ தான் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.

29 வயதாகும் ஹன்சிகா மோத்வானி எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Hansika Marriage Rumour

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here