Home சினிமா கோலிவுட் ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு: ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு!

ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு: ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு!

478
0
Online Pattukku Pattu

Online Pattukku Pattu ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு: ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு! ஹலோவில் ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு (Online Pattukku Pattu) என்ற ஹேஷ்டேக் மூலம் பாடல் நிகழ்ச்சி நடத்தப்ப்படுகிறது.

ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 166 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும், 5,095 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், இந்த 21 நாட்களுமே இணையவாசிகளுக்கு கொண்டாட்டம் தான். எப்போ பார்த்தாலும் செல்போனுடன் இருக்கும் சமூக வலைதளவாசிகளுக்கு இது என்ன சர்வசாதாரணம்.

ஆம், 21 நாட்கள் சும்மா வீட்டில் இருக்கும் செல்போன் வாசிகளுக்கு இந்த 21 நாட்களும் பொழுதுபோக்கு நாட்களாக இருக்கும் வகையில், My Favourite Songs, யுவனின் காதல் கானங்கள்,  Favourite Singer, Favourite Serial Actress ஆகிய ஹலோ ஹேஷ்டேக்குகளில் பிடித்த பாடல்கள், நடிகைகள், படங்கள் என்று பலவற்றையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதோடு, தற்போது ஹலோவில் Helo LOCKDOWN Fun ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, தங்களுக்கு பிடித்த பாடல்களை ஒவ்வொரு நாளும் கொடுக்கப்படும் தலைப்பிற்கு ஏற்றவாறு பாடல் பாட வேண்டும். அல்லது பாடல் வரிகள் எழுதி அனுப்ப வேண்டும்.

அதாவது, இன்றைய தலைப்பிற்கு ஏற்ற பாடலை பாடி #ஆன்லைன்பாட்டுக்குபாட்டு  (Online Pattukku Pattu) ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும்.

அப்படியில்லை என்றால், இன்றைய தலைப்பில் பாடல் வரிகள் எழுதி உங்களது இடுக்கையை #ஆன்லைன்பாட்டுக்குபாட்டு (Online Pattukku Pattu) என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதனை நிகழ்ச்சி தொகுப்பாளினி தொடங்கி வைத்துள்ளார். ஆம், அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தனக்குப் பிடித்த பாடலை பாடி #ஆன்லைன்பாட்டுக்குபாட்டு என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்னதாக பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என்ற டைட்டிலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை அப்துல் ஹமீது என்பவர் முதல் முதலாக வானொளி மூலமாக அறிமுகம் செய்தார். இத்தகைய நிகழ்ச்சிகள் கடல் கடந்து இந்தியாவிலும் வரவேற்பை பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here