Home சினிமா கோலிவுட் ஹிப் ஹாப் ஆதியின் குவாரண்டைன் அண்ட் சில் லிரிக் வீடியோ: யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்டிங்!

ஹிப் ஹாப் ஆதியின் குவாரண்டைன் அண்ட் சில் லிரிக் வீடியோ: யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்டிங்!

247
0
HHT Quarantine Song

Quarantine Chill Song; ஹிப் ஹாப் ஆதியின் குவாரண்டைன் அண்ட் சில் லிரிக் வீடியோ: யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்டிங்! கொரோனாவால் அனைவருமே தனிமையில் இருக்கும் நிலையில், ஹிப் ஹாப் ஆதி அதனை மையப்படுத்தி குவாரண்டைன் அண்ட் சில் என்ற பாடலை பாடியுள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி குவாரண்டைன் அண்ட் சில் Quarantine Chill Song என்ற கொரோனா  பாடலை பாடியுள்ளார்.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி குவாரண்டைன் அண்ட் சில் Quarantine Chill Song என்ற பாடலை ஆதி பாடியுள்ளார்.

ராப் இசை பாடல்கள் என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்றாலும் தமிழிற்கு புதிதலல். யோகி பி போன்ற தமிழ் ராப் கலைஞர்கள் பலர் வலம் வரும் இந்த நேரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துக் கொண்டவர் ஆதி.

தமிழ் மீது பற்று கொண்ட துடிப்போடு இருக்கும் இளைஞனான ஹிப் ஹாப் தமிழா ஆதி திகழ்கிறார். இவர் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.

விஷால் நடிப்பில் வந்த ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இப்படத்தைத் தொடர்ந்து, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கவண், மீசைய முறுக்கு, வந்தா ராஜாவாத்தான் வருவேன், நடிபே துணை, மிஸ்டர் லோக்கல், கோமாளி, ஆக்‌ஷன் என்று ஏராளமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இவரது இசையில் வந்த ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை துள்ளலான குத்தாட்டம் போட வைக்கும். பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. படங்களைத் தவிர சீரியலுக்கு டைட்டில் மியூசிக் கொடுத்துள்ளார்.

அதோடு, படங்களில் ஏகப்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார். இந்த நிலையில் உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு ஒரு பாடல் பாடியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 10 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் #QurantineAndChill என்ற லிரிக் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

சமூக வலைதளத்தில் வைரலான இந்தப் பாடல் யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்டிங் ஆனது. இதுவரை இந்தப் பாடலை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Enthan Kavithaiyin Muthalvari
No Hurry Burry Avasaram Vendam
Unnakeppo Pudichuruko
Appo Sonna Podhum
#QurantineAndChill #No1Trending Qurantine & chill

Hiphop Tamizha Adhi’s Corona Qurantine And Chill song trending in youtube…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here